ETV Bharat / entertainment

உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை; அமெரிக்கா செல்லும் நடிகர் சிவராஜ்குமார்! - SHIVARAJKUMAR HEALTH ISSUE

Shivarajkumar health issue: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா நாட்டிற்கு செல்கிறார்.

உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா செல்கிறார் சிவராஜ்குமார்
உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா செல்கிறார் சிவராஜ்குமார் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

ஹைதராபாத்: கன்னட நடிகர் சிவராஜ்குமார் உயர் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார். கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக விளங்கும் சிவராஜ்குமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மஃப்டி (mufti) திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தமிழில் சிலம்பரசன் நடிப்பில் ’பத்து தல’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற ’ஜெயிலர்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார்.

இதனைத்தொடர்ந்து ’மஃப்டி’ படத்தின் முன்கதையான ’பைரதி ரணகல்’ (Bhairathi ranagal) சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிவராஜ்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை நேர்காணலில் சிவராஜ்குமார் உறுதி செய்தார். மேலும் தனது உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறினார்.

சிவராஜ்குமார் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது. இதனையடுத்து சிவராஜ்குமார் தனது குடும்பத்தாருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தினார். இந்நிலையில் இன்று தனது உயர் சிகிச்சைக்காக சிவராஜ்குமார் அமெரிக்கா செல்கிறார். அவருடன் அவரது மனைவி கீதா மற்றும் உறவினர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இதனைத்தொடர்ந்து பிரபல நடிகர் சுதீப் நடிகர் சிவராஜ்குமாரை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: சூரியின் ’மாமன்’ படத்தில் இணைந்த லப்பர் பந்து நடிகை! - SWASIKA IN MAAMAN MOVIE

அமெரிக்காவில் உள்ள ஃபிளோரிடா மாகாணத்தில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. பின்னர் சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளார். சிவராஜ்குமாரின் நெருங்கிய நண்பர் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "சிவராஜ்குமார் உடல்நலம் குறித்து எந்தவித அச்சமும் தேவையில்லை. சிவராஜ்குமார் உடல்நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார். சிவராஜ்குமார் அடுத்ததாக ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.