ETV Bharat / entertainment

விஜய் சேதுபதிக்கு பதில் இவரா? மகாராஜா குறித்து சாந்தனு ஓபன் டாக்! - Shanthanu in Maharaja movie

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 21, 2024, 3:58 PM IST

Shanthanu in Maharaja: சமூக வலைத்தளத்தில் மகாராஜா திரைப்பட வாய்ப்பை நடிகர் சாந்தனு நிராகரித்தார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகர் சாந்தனு விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஜா பட வாய்ப்பு குறித்து சாந்தனு விளக்கம்
மகாராஜா பட வாய்ப்பு குறித்து சாந்தனு விளக்கம் (Credits - Vijay sethupathi X Account, ETV Bharat Tamil Nadu)

சென்னை: ’குரங்கு பொம்மை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானாவர் நித்திலன் சுவாமிநாதன். முதல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் பெரிய அளவில் பேசப்பட்டவில்லை. இந்நிலையில், நித்திலன் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ’மகாராஜா’ பெரும் வரவேற்பைப் பெற்றது.

மகாராஜா படத்தின் திரைக்கதை மூலம் நித்திலன் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தமிழ் சினிமா படங்களை பார்க்காதவர்கள் கூட ’மகாராஜா’ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தேடி பார்த்தனர். அதற்கு முதல் காரணமாக பார்க்கப்படுவது, அப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் யூகிக்க முடியாத திரைகக்கதை. மிகவும் சாதாரண கதைக்கு, திரைக்கதை மூலம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “மகாராஜா படத்தின் கதையை பல நடிகர்களிடம் கூறினேன். நடிகர் சாந்தனுவிடம் கூறிய போது அவருக்கு பிடித்திருந்தது. அவருடன் சேர்ந்து பல தயாரிப்பாளர்களை அணுகினேன். ஆனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனது முதல் படமாக குரங்கு பொம்மையை இயக்கினேன். இரண்டாவதாக மகாராஜா படத்தை இயக்கினேன்” என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சாந்தனு ஏன் இந்த மகாராஜா கதையில் நடிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் சாந்தனு இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், “இயக்குநர் நித்திலன், மகாராஜா கதைக்கு உயிர் கொடுத்ததற்கு மகிழ்ச்சி. நான் அப்போதே சரியான கதையை தேர்ந்தெடுத்ததில் பெருமை அடைகிறேன்.

அதேபோல் 10 வருடம் கடந்த பின்பும், என்னை அங்கீகரித்து நான் இந்த கதையைக் கேட்டேன் என கூறியதற்கு நன்றி. அப்போது நானோ, எனது தந்தையோ இந்த கதையை நிராகரிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இயக்குநர் நித்திலன் இந்த கதையை என்னிடம் வந்து கூறியது எனது தந்தைக்கு தெரியாது.

அந்த காலக்கட்டத்தில் தயாரிப்பாளர்கள் இந்த கதையை தயாரித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனால், இன்று 'Content is king' என்பது நிருபணம் ஆகியுள்ளது. நான் எப்போதும் நல்ல கதைகளைக் கேட்க ஆவலாக உள்ளேன். அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மாஸ் காட்டும் 'மகாராஜா'.. அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை! - maharaja Netflix record

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.