சென்னை : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. ஆனால், இயக்குநர் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படமாக தற்போது உருவாகி உள்ளது. மேலும், இந்தாண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இந்தியன் 2, வேட்டையன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலான வெற்றியை பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது.
A new chapter unfolds 📖 as we welcome our exceptional cast & crew @sundeepkishan 😎 @MusicThaman 🎶 & @Cinemainmygenes ✂️🎞️ on board for JASON SANJAY-01 📚💵
— Lyca Productions (@LycaProductions) November 29, 2024
▶️ https://t.co/5kPO4Kvz0U
On floors soon... 📽️🎬@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran…
ஆனால், அதன் பிறகு எந்தவித தகவலும் வெளிவராமல் இருந்தது. இதனையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு டீசர் இன்று( நவ 29) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : “Until we meet again dad”... நடிகை சமந்தாவின் தந்தை உயிரிழந்தார்
டீசரின் தொடக்கத்தில் நூலக காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு டீசர் என்பதால் பெரிதாக காட்சிகள் ஏதும் காண்பிக்கவில்லை. ஆனால், தமனின் பின்னணி இசை மாஸாக இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக லைகா புரொடக்சன்ஸ் ஜி.கே.எம் தமிழ் குமரன் கூறும்போது, "நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும், புதிதாகவும் இருந்தது.
குறிப்பாக, அந்த கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். 'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இந்த படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்.
படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி கேட்டபோது, "படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரும் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்