ETV Bharat / entertainment

'கேம் சேஞ்சர்' படத்தின் முக்கிய அப்டேட் வந்தாச்சு! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? - GAME CHANGER MOVIE RELEASE DATE

ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த வருடம் ஜன 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

கேம் சேஞ்சர் போஸ்டர்
கேம் சேஞ்சர் போஸ்டர் (Credits - shankar shanumugam X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 4:27 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று அறியப்படுபவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பரவலான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இவர் நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தி ராம் சரண் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும், நடிகை அஞ்சலி முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க : கமலாவிற்காக களமிறங்கும் ரகுமான்.. அமெரிக்காவை அலறவிடப்போகும் சாங்..!

இந்நிலையில் இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்‌சன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளின் சிக்கல்களை பேசும் படமாக கேம் சேஞ்சர் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 'ரா மச்சா மச்சா' என்கின்ற பாடல் யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.