ETV Bharat / entertainment

“இனி அவரு அவ்வளவு தான், வரவே மாட்டார் என்றார்கள்.. இதோ வந்துவிட்டேன்” - ராதாரவி பெருமிதம்! - radha ravi dubbing union election - RADHA RAVI DUBBING UNION ELECTION

Radha Ravi about dubbing union election: “நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் எனவும், இனிமேல் வரவே மாட்டார் என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் சொன்னதால் தான் நான் வேகமாக நடந்து வர ஆரம்பித்தேன்” என டப்பிங் யூனியன் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாரவி கூறியுள்ளார்.

இனி அவரு அவ்வளவு தான், வரவே மாட்டார் என்றார்கள், இதோ வந்துவிட்டேன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 10:46 PM IST

இனி அவரு அவ்வளவு தான், வரவே மாட்டார் என்றார்கள், இதோ வந்துவிட்டேன்

சென்னை: தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு, 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் 23 நபர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த மார்ச் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவில் ராதாரவி வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார்.

மொத்தமுள்ள 1,465 வாக்குகளில் 1,017 வாக்குகள் பதிவானது. அதில் ராதாரவி 662 வாக்குகளும், ராஜேந்திரன் 349 மற்றும் சற்குணராஜ் 36 வாக்குகளையும் பெற்றனர். அதேபோல், ராதாரவி அணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக ராதாரவி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். நடக்க முடியாத நிலையிலும் வந்து, தனது தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக கதிரவன், பொருளாளராக ஷாஜிதா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். துணைத் தலைவர்களாக துர்கா சுந்தரராஜன், மாலா, மோகன் குமாரும் இணைச் செயலாளர்களாக எமி, குமரன், சதீஷ் குமார் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராதாரவி, "ராதாரவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், இனிமேல் வரவே மாட்டார் என்று சொன்னார்கள். ஒரு மனிதன் விழுந்தால் தூக்கிவிட வேண்டும், அதை விட்டுவிட்டு அவன் விழுந்து விட்டான் பார்த்தியா என்று சொன்னால் எப்படி இருக்கும்?

ஆனால் அவர்கள் எல்லாம் சொன்னதால்தான் நான் வேகமாக நடந்து வர ஆரம்பித்தேன். நான் வந்துவிடுவேன் என்ற பயத்தில் சொன்னார்கள், கடைசியில் தேர்தல் முடிவு, அவர்கள் வரவே மாட்டார்கள் என்று ஆகிவிட்டது. நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எனக்கு 300 படங்கள் போய் இருக்கும், ஆனாலும் கவலையில்லை.

மறுபிறவி என்று இருந்தால், உங்கள் பாதங்களாக பிறக்க வேண்டும். நான் இருக்கும் வரையில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். டப்பிங் யூனியன் அலுவலக கட்டிடம் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அதில் நாம் செயல்படுவோம். எங்கே போனாலும் உங்களுடன் தான் இருப்பேன்” என்று பேசினார்.

இதையும் படிங்க: "என்ட சேட்டன் சேச்சிமாரே" - கேரளாவில் மீண்டும் மாஸ் காட்டிய விஜய்.. வைரலாகும் செஃல்பி வீடியோ! - Actor Vijay

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.