ETV Bharat / entertainment

தனுஷ் மீதான தடைக்கு காரணம் இதுதான் - நடிகர்‌ ராதா ரவி சொன்னது என்ன? - Dhanush vs Producers Council - DHANUSH VS PRODUCERS COUNCIL

Actor Radha Ravi Spoke About Dhanush: தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் குறித்து, விரைவில் அனைத்து சங்கங்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நடிகர்‌ ராதா ரவி தெரிவித்துள்ளார்.

ராதா ரவி மற்றும் தனுஷ்
ராதா ரவி மற்றும் தனுஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 12:52 PM IST

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை சார்பில், மறைந்த நடிகர்கள் விசு மற்றும் பிறைசூடன் ஆகியோருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியும், மூத்த எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியானது சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ராதா ரவி, "சினிமாவில் நிரந்தர விரோதிகள் என யாரும் இல்லை, நிரந்தர நண்பர்கள் என யாருமில்லை. பெப்சி யூனியனில் 24 யூனியன்கள் உள்ளது. இந்த சங்கங்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை.

எனக்கு 2 காலிலும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்னால் நடக்கவே முடியவில்லை ஆனாலும் இங்க வருவதற்கான காரணம் என்னுடைய ஆர்வம். டப்பிங் யூனியனில் நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு வருடா வருடம் 1 லட்சம் ரூபாய் பண உதவிகள் செய்து வருகிறோம்.

சினிமாவில் என்னை எல்லோரும் திருடன் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் எல்லோரின் மனதை திருடியவன் தான். 2 கோடி 3 கோடி பணம் திருடிவிட்டேன் என்று சொல்கிறார்கள் ஆனால், நான் அதைப் பற்றி எதுவும் கவலைப்படுவதில்லை" என்று கூறினார்

இதன் தொடர்ச்சியாக ராதா ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பிரச்சனை இன்று அல்லது நாளை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது இப்போதைக்கு தீரப் போவதில்லை. விஜயகாந்த் இருந்த வரை எந்த சங்கத்திலும் எந்த பிரச்சினையும் வந்ததில்லை.

இப்போது நடக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லை மீறி போகிறது. நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள், தயாரிப்பாளர்களுக்கு அந்த கோவத்தை யார் மீது காமிப்பது என்று தெரியாமல் தற்போது தனுஷ் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

தனுஷ் ஒரு நல்ல மனிதர், ஒரு நல்ல படம் தற்போது கொடுத்து விட்டார் என்பதால், அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மூலம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் ஒரு தயாரிப்பாளர்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். விரைவில் அனைத்து சங்கங்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும்.

எங்களை கூப்பிட்டுத்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில்லை, கூப்பிடாமலேயே நாங்கள் செல்வோம். எங்களுக்கும் உரிமை உள்ளது. அப்படி எந்த சினிமாவையும் நிறுத்தி வைக்க முடியாது. எல்லோரும் படம் பண்ண வேண்டும். விஷாலை பற்றி திட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் அவர் எதாவது செய்து கொண்டு தானே வருகிறார்.

இப்போது என்னை நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நான் எங்கே போவது? எனக்கு கேமரா முன்பு நடிக்க மட்டும்தான் தெரியும். இதன்மூலம் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகிய இரண்டு சங்கங்களும் பிரச்சினையுடன் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளது" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "நான் ஆணவக்கொலைக்கு ஆதரவானவன் கிடையாது" - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஞ்சித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.