ETV Bharat / entertainment

அந்தகன் பாடலைக் கேட்டதும் விஜய் இதைத்தான் சொன்னார்.. பிரசாந்த் ருசிகர பகிர்வு! - Actor prasanth about vijay - ACTOR PRASANTH ABOUT VIJAY

Actor prasanth about vijay: அந்தகன் பட புரோமோ பாடல் வெளியீட்டு விழாவில், இப்படத்தின் புரோமோ பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு நன்றி என நடிகர் பிரசாந்த் கூறினார்.

நடிகர் பிரசாந்த் புகைப்படம்
நடிகர் பிரசாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 6:26 PM IST

சென்னை: ஸ்டார் மூவிஸ் ப்ரீத்தி தியாகராஜன் தயாரிப்பில், இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. இப்படம் இந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமானது. இந்நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் பிரசாந்த், கார்த்திக், ப்ரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரோமோ பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். அந்தகன் படத்தின் புரோமோ பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன், பெசன்ட் ரவி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் பிரியா ஆனந்த், ஊர்வசி, வனிதா விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த், "முதலில் புரோமோ பாடல் ரிலீஸ் செய்த நடிகர் விஜய்க்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய வேலை செய்துள்ளோம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்த நடிகர்களைப் பார்த்து நடிக்க வைத்துள்ளோம். படம் பார்த்தவர்கள் நன்றாக இருந்தது என்று சொன்னதாக கூறியுள்ளனர். ரசிகர்கள் நீங்கள் காட்டிய அன்பும், ஆதரவுக்கும் நன்றி என்றார்.

நான் நிறைய இயக்குநர்களுடன் வேலை செய்து இருக்கிறேன். ஆனால், இந்த படத்தில் நடிக்கும் போது எனது தந்தை தியாகராஜனுடன் சேர்ந்து வேலை செய்தது சந்தோஷமாக உள்ளது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த், நிறைய படங்கள் சிம்ரனுடன் நடித்துள்ளீர்கள். இந்த படத்தில் கெமிஸ்ட்ரி எப்படி என்ற கேள்விக்கு, கெமிஸ்ட்ரி மாதிரி தான் நன்றாக இருந்தது என்றார்.

மேலும், அவர் இந்த படத்தில் ஜோடியா என்று தெரியாது. ஆனால் அந்த படத்தில் ஒரு டிவிஸ்ட் இருக்கு என்றார். பார்வை தெரியாதவராக நடிக்கும் போது எளிதாக இருந்தது. உங்கள் படத்தில் அப்பா வில்லனாக நடித்தால் நடிப்பீர்களா என்றதற்கு, நாங்கள் இரண்டு பேருமே ஹீரோக்கள் தான். நாங்கள் இருவரும் வில்லனாக நடிக்க முடியாது, நடிக்கவும் மாட்டார் என்றார்.

விஜய் சார், புரோமோ பாடல் ரிலீஸ் செய்தது குறித்து, நான் கேட்டதும் சரி என்று சொல்லிவிட்டார். பாடலைப் பார்த்து ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கூறினார், அவருக்கு ரொம்ப நன்றி. 50 படங்கள் நடித்தாலும் எந்த ஹீரோயின் பிடிக்கும் என்று செய்தியாளர் கேட்டதற்கு, அனைவரையும் பிடிக்கும். சிம்ரன் மிகவும் சிறந்த நடிகை" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆதி - நிக்கி கல்ராணி குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம்! - Nikki Galrani Darshan At Temple

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.