ETV Bharat / entertainment

ஹெல்மெட் அணியாததால் ரூ.2 ஆயிரம் அபராதம் - நடிகர் பிரசாந்த் அளித்த விளக்கம் - ACTOR PRASANTH ABOUT HELMET ISSUE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 12:40 PM IST

Actor prasanth about helmet awareness: தமிழ்நாடு முழுவதும் ஹெல்மெட் குறித்து அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருகிறேன் எனவும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது உங்களது குடும்பத்திற்கும் முக்கியம் எனவும் நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.

நடிகர் பிரசாந்த், ப்ரியா ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு
நடிகர் பிரசாந்த், ப்ரியா ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: நடிகர் பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அந்தகன்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், " 'அந்தகன்' காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த படமாக வந்துள்ளது. பான் இந்தியா படமாக தமிழில் முதன் முறையாக ஜீன்ஸ் படம் தான் வெளியானது. அதுபோன்று தற்போது எந்த படம் எடுத்தாலும் அது அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளதுடன் சிரமம் எடுத்து இந்த படத்தை தயாரித்துள்ளோம்.

நடிகர் பிரசாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் கண்பார்வையற்ற நபராக மிகுந்த சிரமம் எடுத்து நடித்துள்ளேன், பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதுடன் இந்த படம் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். திரைப்பட விமர்சனங்களை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்குநர் ஷங்கருடன் மீண்டும் இணைவது குறித்த கேள்விக்கு, கதைக்கேற்ப நான் தேவைப்பட்டால் நிச்சயம் மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து நடிப்பேன் என தெரிவித்தார்.

மேலும் தற்போது ஆடியன்ஸ் ரசனை மாறிவிட்டது, முன்பு ஆக்ஷன் மற்றும் காதல் படங்கள் அதனை பின்தொடர்ந்து நடித்து வந்தோம். 5 வருடத்திற்கு முன்பு கதை மையமாக இருந்தது தற்போது திரைக்கதை மையமாக உள்ளது. நல்ல ஸ்கிரீன் ப்ளே உள்ள கதை நல்ல வெற்றியை பெறுகிறது. பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என்பதை மக்கள் பார்ப்பதில்லை கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். காலத்திற்கு ஏற்ப ஓடிடி தளங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

ரீல்ஸ் நல்லது தான்: இன்றைய இளைஞர்கள் அதிகமாக ரீல்ஸ் மோகத்தில் உள்ளதற்கான காரணம் குறித்த கேள்விக்கு, ரீல்ஸ்களில் நீங்களே கேமராமேன், நடிகர், டைரக்டர் ஆகலாம் என்ற பட்சத்தில் இளைஞர்கள் கிரியேட்டிவிட்டியை வெளிக்கொண்டு வர ஒரு வாய்ப்பாக உள்ளது. நிலையில், அதே நேரம் ரீல்ஸ் செய்யும் போது பாதுகாப்புடன் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

ஹெல்மெட் விவகாரம்: சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிரசாந்த் வாகனம் ஓட்டிய போது போலீசார் அபராதம் விதித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஹெல்மெட் குறித்து அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருகிறேன், தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவும், அது உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் முக்கியம் என வலியுறுத்தினார்.

விஜயின் அரசியல் வருகை: கோட் திரைப்படம் குறித்து கேட்டதற்கு, கோட் ஒரு சிறப்பான திரைப்படம், நாளை (ஆக.3ஆம் தேதி) இந்த படம் குறித்த அப்டேட் வர உள்ளது. நடிகர் விஜய்க்கு ஒரு சகோதரராக அவரது நலம் விரும்பியாக அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் அரசியலை தேர்வு செய்திருப்பது நல்ல விஷயம் தான், ஆனால் மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு நான் ஆதரவு அளிப்பேன், அது யாராக இருந்தாலும் சரி" என்றார்.

இதனைத்தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் பிரசாந்த், திருட்டு வீடியோ என்பது சினிமா துறையை சீரழிக்கும் வகையில் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல விஷயம், இதுபோன்று வெளியாகும் படங்களை மக்கள் பார்க்காமல் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகர் பிரசாந்திற்கு ரூ.2,000 ரூபாய் அபராதம்! சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி! - ACTOR PRASANTH BIKE RIDE ISSUE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.