ETV Bharat / entertainment

'கோட்' படத்தில் AI தொழில்நுட்பத்தில் மாஸாக வந்த விஜயகாந்த்.. டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா? - Actor manikandan for Vijayakanth - ACTOR MANIKANDAN FOR VIJAYAKANTH

Actor manikandan dubbed for Vijayakanth: 'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பிரபல நடிகர் விஜயகாந்த் கதாபாத்திரம் உருவாக்கப்படிருந்த நிலையில், அவருக்கு நடிகர் மணிகண்டன் டப்பிங் செய்துள்ளார்.

கோட் படத்தில் விஜயகாந்திற்கு டப்பிங் கொடுத்த மணிகண்டன்
கோட் படத்தில் விஜயகாந்திற்கு டப்பிங் கொடுத்த மணிகண்டன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 8:18 AM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'கோட்' (the greatest of all time). இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் கோட் திரைப்படம் 151.1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், உலக அளவில் ரூ.285 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், கோட் திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பல பெரிய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோட் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதைப்படி வில்லனாக நடித்த மகன் கதாபாத்திரம் பாராட்டை பெற்று வருகிறது. துடிப்பான இளைஞராக விஜய்யின் நடிப்பு வேறு பரிணாமத்தில் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், கோட் படத்தில் மகன் விஜய் கதாபாத்திரம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் தோற்றமும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. படத்தின் ஆரம்ப காட்சியிலேயே விஜயகாந்த் தோன்றுவது போல காட்சிபடுத்தப் பட்டிருக்கும். விஜயகாந்த் வரும் காட்சிகளுக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது.

இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்த் பேசும் வசனங்களுக்கு நடிகர் மணிகண்டன் குரல் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்கள் போன்று மிமிக்ரி செய்து பாராட்டை பெற்றுள்ளார். மேலும், மணிகண்டன் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான Lover திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விஜய் மகன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம்; ஹீரோ யார் தெரியுமா? - Sundeep kishan with jason sanjay

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.