ETV Bharat / entertainment

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்கிறேனா? -மனம் திறந்த KPY பாலா! - Actor KPY bala - ACTOR KPY BALA

Actor KPY bala: ஒரு சிலர் கூறுவது போல, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்காக நான் உதவி செய்யவில்லை, வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன் என நடிகர் KPY பாலா கூறியுள்ளார்.

KPY bala photo
நடிகர் KPY பாலா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 1:05 PM IST

தேனி: தனியார் தொலைக்காட்சி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, சினிமாவில் திரைப்படங்களில் நடித்துவரும் காமெடி நடிகர் பாலா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக், செந்தில் உள்ளிட்ட புகழ்பெற்ற சினிமா பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்தும், காமெடி செய்தும் பேசியதோடு, பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, "ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி மக்களின் அன்பு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதால் உதவி செய்கிறேன் என்றார். எனக்கு அரசியல் பற்றி எல்லாம் தெரியாது, யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள். மற்றவர்களை பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நம்மால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே, ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாரும் செயல்படவில்லை. என் பின்னால் இருப்பது கஷ்டங்கள், வெட்கம், அடி, வலி ஆகியவை மட்டும் தான். இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சிலர் கூறுவது போல கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்காக நான் உதவி செய்யவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன். மூன்று வேளை உணவுக்கு சிரமப்பட்ட எனக்கு உணவு கிடைத்ததால் இந்த எண்ணம் தோன்றியது" என்று நடிகர் KPY பாலா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஓராண்டாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்.. தேனி மின்வாரிய அதிகாரியிடம் கோரிக்கை மனு! - M Subbulapuram Power Cut Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.