ETV Bharat / entertainment

லட்டு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு... பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! - karthi apologized for laddu issue - KARTHI APOLOGIZED FOR LADDU ISSUE

Actor karthi apologized for laddu issue: நடிகர் கார்த்தி தனது திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் லட்டு குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கார்த்தி, பவன் கல்யாண் புகைப்படம்
கார்த்தி, பவன் கல்யாண் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 1:52 PM IST

சென்னை: நடிகர் கார்த்தி திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் திருப்பதி லட்டு குறித்து பேசியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படம் தெலுங்கு மொழியில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம், தொகுப்பாளர் லட்டு கொடுத்த போது, ”லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம்” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி லட்டு குறித்து பேசியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன். லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என கூறியுள்ளனர். அவ்வாறு சொல்லக் கூடாது. நான் உங்களை நடிகர்களாக மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் போது, ஒன்றுக்கு 100 முறை யோசித்து பேச வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து.. இயக்குநர் மோகன்ஜி கைது! - MOHAN G ARREST

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே, லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை கடைபிடித்து வருகிறேன்" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.