ETV Bharat / entertainment

ஆரம்பிக்கலாமா? 'தக் லைஃப்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் கமல்ஹாசன்! - thug life dubbing - THUG LIFE DUBBING

thug life dubbing: 'தக் லைஃப்' படத்திற்கு கமல்ஹாசன் டப்பிங் பேசி வருவதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் தக் லைஃப் போஸ்டர்
கமல்ஹாசன் தக் லைஃப் போஸ்டர் (RKFI X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 29, 2024, 3:06 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம் . இவரது இயக்கத்தில் கடைசியாக ரெண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசனை வைத்து இயக்கிவரும் புதிய படம் 'தக் லைஃப்' (Thug Life). இது கமல்ஹாசனின் 234வது படமாகும். இப்படத்தின் மூலம் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

இதில் சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தது. தற்போதுவரை 60 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அப்போது அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்சன் திரில்லராக உருவாகிவரும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சிம்பு இந்த படத்திற்கு டப்பிங் செய்வதாக படக்குழு அறிவித்தது. தற்போது 'தக் லைஃப்' படத்திற்கு கமல்ஹாசன் டப்பிங் செய்வதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: புஷ்பா 2 படம் ட்ராப்பா? பிலிம் சிட்டியில் முற்றுப்புள்ளி வைத்த அல்லு அர்ஜுன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.