ETV Bharat / entertainment

'ரகளை ரகளை ராயா ராயா.. தனுஷின் ராயன் படத்தின் 3வது சிங்கிள் வெளியானது! - Raayan Third Single out - RAAYAN THIRD SINGLE OUT

Raayan Third Single: நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்திலிருந்து 'ராயன் ரம்பிள்' எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ராயன் பாடல் போஸ்டர்கள்
ராயன் பாடல் போஸ்டர்கள் (Credits - Dhanush X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 7:04 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர். இவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தற்போது தெலுங்கு சினிமாவில் குபேரா படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது என பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், தற்போது தனது 50வது படமாக ராயன் படத்தை நடித்து இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து ஏற்கனவே அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம், வாட்டர் பாக்கெட் என இரு பாடல்கள் வெளியான நிலையில், இன்று மூன்றாவது பாடலான 'ராயன் ரம்பிள்' எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலானது படத்தில் சண்டைக் காட்சிகள் வரும் போது பயன்படுத்தப்படும் பாடலாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை (ஜூலை 6) நடைபெற இருக்கிறது. ராயன் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜ்கிரண், ரேவதி நடித்த ப.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க : குபேரா மழை கொட்டிடுச்சு.. ராஷ்மிகா மந்தனா பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது! - KUBERA RASHMIKA FIRST LOOk VIDEO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.