ஐதராபாத் : நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டு உள்ளது. போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், தனுஷ் ரசிகர்கலை குதூகலிக்கச் செய்யும் வகையில் புது அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.
ராயன் படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூன் மாதம் ராயன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்து எந்த வித அறிவிப்பை வெளியிடாமல் படக்குழு மவுனம் காத்து வருகிறது.
அதேநேரம், இயக்குநர் ஷங்கர் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படமும் ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்தாக தகவல் கூறப்படுகிறது. இதனால் இந்தியன் 2 படத்துடன் நேரடியாக மோத விரும்பாமல் ரிலீஸ் தேதியை மாற்ற ராயன் படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.
ராயன் டீசரில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் ராயன் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஸாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக இருந்து வரும் நடிகர் தனுஷின் நடிப்பில் காதல் கதைக் களம் கொண்ட "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இது தவிர சேகர் கம்முலாவின் "குபேரா" படத்திலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், இசைஞானி இளையராஜாவின் வாழ்கை வரலாற்று கதையிலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! - Dhanush Aishwarya Divorce