ETV Bharat / entertainment

வயநாடு நிலச்சரிவு: நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி! - Actor Dhanush

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 12:54 PM IST

Actor Dhanush Extends Support to Wayanad: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் தனுஷ் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் வயநாடு  நிலச்சரிவு தொடர்பான கோப்புப்படம்
தனுஷ் மற்றும் வயநாடு நிலச்சரிவு தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து, முதலமைச்சர் பிரனாயி விஜயன், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களால் இயன்ற நிதியினை 'முதலமைச்சர் நிவாரண நிதிக்கு' அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் முயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவது மட்டும் அல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. அதவது படம் வெளியாகி தற்போது வரை 100க்கு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலச்சரிவு: வயநாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த சம்பவத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்புத் துறை, தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வயநாடு சென்ற பிரதமர் மோடி, நிலச்சரிவில் இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளை மேற்கொள்ள மத்திய அரசு, கேரளா அரசுடன் துணை நிற்கும் என உறுதியளித்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

குறிப்பாக மூத்த நடிகைகளான மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி பிரியதர்ஷன் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்கள். மேலும் சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம், நயன்தாரா -விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சம் வழங்கியுள்ளனர். இதே போல் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் இணைந்து ரூ.1 கோடி, நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி என பலர் நன்கொடை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: "நான் ஆணவக்கொலைக்கு ஆதரவானவன் கிடையாது" - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஞ்சித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.