ETV Bharat / entertainment

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் - DANIEL BALAJI - DANIEL BALAJI

Actor Daniel Balaji Passed Away: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Actor Daniel Balaji Passed Away
Actor Daniel Balaji Passed Away
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 6:50 AM IST

Updated : Mar 30, 2024, 1:03 PM IST

சென்னை: காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர், டேனியல் பாலாஜி. இவர் திடீர் மாரடைப்பால் காலமாகினார். அவருக்கு வயது 48.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர், டேனியல் பாலாஜி. இவர் மறைந்த நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். திரைப்பட கல்லூரியில் படித்த இவர் ராதிகா நடித்த சித்தி, அலைகள் ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

பின்னர், தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்த இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படத்தில் அமுதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அப்படம் டேனியல் பாலாஜிக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், இவரது தனித்துவமான குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதன்பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, பைரவா, வடசென்னை, பிகில் என பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு வில்லாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், திருவான்மையூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது, டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரை பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகப் பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அவரது உடல் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் திரைத்துறை பிரபலங்கள் என வரத் தொடங்கினர். குறிப்பாக தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ்மேனன், அமீர், வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் போன்ற திரை பிரபலங்களும் டேனியல் பாலாஜியின் உடலை காண வருகை தந்தனர்.

மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக, சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.

இதையும் படிங்க: “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி கேரண்டி கொடுத்தாரா?” - ராமதாஸ்-க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி! - MK Stalin On PMK Alliance

Last Updated : Mar 30, 2024, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.