சென்னை: நடிகர் முரளியின் மகனான அதர்வா, பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், சண்டிவீரன், ஈட்டி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீபத்திய இவரது படங்கள் போதிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து, ஃபர்ஹானா படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் ‘டிஎன்ஏ’ படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.
‘டாடா’ படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சித்தா படக் கதாநாயகி நிமிஷா சஜயன், இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், டிஎன்ஏ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் டிரைலர், ஆடியோ மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “இளையராஜா அப்படி கூறவில்லை..” வைரமுத்து விவகாரத்தில் சீமான் கூறியது என்ன? - SEEMAN About Ilayaraja Issue