ETV Bharat / entertainment

”விஜய் என்றாலே வெற்றி தான், அரசியலிலும் அப்படி தான்” - நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி - ACTOR ANANDARAJ ABOUT VIJAY

விஜய் சினிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்தே வெற்றி தான் எனவும், நிச்சயமாக அவருக்கு அரசியலுக்கு கை கொடுக்கும் எனவும் நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.

நடிகர் ஆனந்த்ராஜ்
நடிகர் ஆனந்த்ராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 4:41 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த்ராஜ், ”இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்து பெரிய கோயிலை பார்க்க ஆசைப்படுவார்கள், இது கட்டிட கலையுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ஆலயம் என்றார். பிறகு தற்போது அரசியலில் ஈடுபடாமல் உள்ளது குறித்து கேட்டதற்கு, “சினிமா தற்போது நன்றாக உள்ளது. அதனால் தான் அரசியலில் இல்லாமல் சினிமாவை பார்த்து வருகிறேன்” என்றார்

மேலும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குறித்து பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், ”சீமானை நடிகராக தான் தெரியும், அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். தற்போது அவருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் LIK என்ற படத்தில் நடித்து வருகிறேன். அவருடன் சில விஷயங்களை நேரில் பேசி பின்னர் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து விஜய் அரசியல் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”நடிகர் விஜய்யின் முன்னெடுப்புக்கு வாழ்த்துக்கள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன். தஞ்சை பெரிய கோயிலை பார்க்க தமிழ் மக்களை விட வட இந்தியர்கள், அயல் நாட்டினர் அதிகமாக வருகின்றனர்.

இதையும் படிங்க: "அனைவருக்கும் மன அழுத்தம் உள்ளது"... விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்!

இது மிகப்பெரிய பெருமை என்றும், இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி” என்றும் கூறினார். இதனையடுத்து நடிகர் ஆனந்தராஜுடன் பொதுமக்கள் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.