திருவனந்தபுரம்: 54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதனை, அம்மாநில தலைமைச் செயலகத்தில் வைத்து கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார். இந்த விருதுகளை இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான சுதிர் மிஸ்ரா தலைமையிலான குழு இறுதி செய்துள்ளது.
இதன் அடிப்படையில், மிகவும் பாரட்டப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் மொத்தம் எட்டு விருதுகளைக் குவித்துள்ளது. குறிப்பாக, சிறந்த நடிகராக பிருத்விராஜ், சிறந்த இயக்குநராக பிளெஸி மற்றும் சிறந்த நடிகருக்கான ஜூரி மென்ஷன் விருது கேஆர் கோகுல் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுகளைக் குவித்த படங்களின் பட்டியல்;
- சிறந்த திரைப்படம் - காதல் தி கோர்
- சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)
- சிறந்த நடிகர் - ஊர்வசி மற்றும் பீனா ஆர் சந்திரன்
- சிறந்த இயக்குநர் - பிளெஸி (ஆடுஜீவிதம்)
- சிறந்த இரண்டாம் படம் - இரட்டா
- சிறந்த திரைக்கதை - பிளெஸி (ஆடுஜீவிதம்)
- சிறந்த திரைக்கதை - ரோகித் எம்ஜி கிருஷ்ணன் (இரட்டா)
- சிறந்த ஒளிப்பதிவாளர் - சுனில் கேஎஸ் (ஆடுஜீவிதம்)
- சிறந்த குணச்சித்திர நடிகர் - விஜயராகவன்
- சிறந்த குணச்சித்திர நடிகை - க்ரீஸ்மா சந்திரன்
- சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் வர்கீஸ்
- சிறந்த பாடலாசிரியர் - ஹரீஷ் மோகனன்
- சிறந்த பிண்ணனி இசை - மாத்தீவ்ஸ் புலிகல் (காதல்)
- சிறந்த பிண்ணனி பாடகர் - வித்யாதரண் மாஸ்டர்
- சிறந்த பிண்ணனி பாடகி - அன் அமி
- சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) - அவ்யுக்த் மேனன்
- சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) - தென்னல் அபிலாஷ்
- சிறந்த அறிமுக இயக்குநர் - ஃபாசில் ரசாக் (தடவு)
- சிறந்த பிரபல திரைப்படம் - ஆடுஜீவிதம்
- சிறந்த டப்பிங் கலைஞர் - சுமங்கலா மற்றும் ரோஷன் மாத்தீவ்
- சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ஃபெமினா ஜாபர் (ஓ பேபி)
- சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ரஞ்சித் அம்பாடி
- சிறந்த கலை இயக்கம் - மோகந்தாஸ் (2018)
- சிறந்த நடன இயக்கம் - ஜிஷ்னு (சுலேகா மன்சில்)
- சிறந்த திரைக்கதை - மழவில் கன்னிலோட் (கிஷோர் குமார்)
- சிறந்த நடிகருக்கான ஜூரி மென்ஷன் - கிருஷ்ணன் (ஜைவம்), கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)
- சிறந்த ஒளிப்பதிவு - சங்கீத் பிரதாப் (லிட்டில் மிஸ் ராவுத்தர்)
- சிறந்த கலரிஸ்ட் - விசாக் சிவகணேஷ் (ஆடுஜீவிதம்)
- விஎஃப்எக்ஸ் பணிகளுக்கான சிறப்பு ஜூரி மென்ஷன் - ஆண்ட்ரோ டி குரூஸ், விஷால் பாபு (2018)
- சிறந்த படத்திற்கான ஜூரி விருது - ககனாச்சாரி
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் முதல் காந்தாரா வரை.. 70வது தேசிய திரைப்பட விருதுகள் முழு பட்டியல்!