ETV Bharat / entertainment

விடாமுயற்சி ஷூட்டிங்கில் பயங்கர விபத்து.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ! - vidaamuyarchi ajith - VIDAAMUYARCHI AJITH

vidaa muyarchi ajith update: விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் மற்றும் ஆரவ்விற்கு விபத்து ஏற்பட்ட வீடியோவை அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

விடாமுயற்சி ஷூட்டிங்கில் ஏற்பட்ட பயங்கர விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 3:11 PM IST

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் படத்தின் முக்கிய சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நடிகர் அஜித்குமார் ஆரவ்வும் இந்த ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காட்சியின் முடிவில் கார் கவிழ்வது போன்று எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச் சென்ற காரை கவிழ்த்துள்ளார். இந்த விபத்து காட்சிகளுக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் நலமுடன் காரில் இருந்து வெளியில் வந்ததாகவும் அவருக்கு எந்தவித விபத்துகளும் காயங்களும் ஏற்படவில்லை என்றும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியான காட்சிகள் படத்தின் மேக்கிங் வீடியோ இல்லை என்றும், படப்பிடிப்பின் மேற்பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது என்றும் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதேபோன்று ரசிகர்கள் தொடர்ந்து இணையதளத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டுக்களை கேட்டு வந்த நிலையில் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் எப்போதும் அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் பாதுகாப்பு உபகரணங்களுடன் தானே நடித்து விடுவார். அவ்வாறு மங்காத்தா, பில்லா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது ஆபத்தானது என்றாலும், சினிமாவின் மேல் உள்ள அர்ப்பணிப்பில் அவரே நடிக்கிறார் என ரசிகர்கள் அஜித்தை புகழ்வது வழக்கம். நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் good bad ugly படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: ஜிம்மில் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் சூர்யா, ஜோதிகா ஜோடி; வைரலாகும் வீடியோ! - Suriya Jyothika Workout Video

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.