ETV Bharat / entertainment

தேசிய விருது வரலாறு... அதிக முறை வென்ற நடிகர்கள், இசையமைப்பாளர்கள் யார் தெரியுமா? - 70TH NATIONAL FILM AWARDS

70th National Film Awards: 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், தேசிய விருதுகள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை காணலாம்

70வது தேசிய விருதுகள் தொடர்பான புகைப்படம்
70வது தேசிய விருதுகள் தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 8, 2024, 1:45 PM IST

ஹைதராபாத்: 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்.08) மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு அறிவிக்கபட்ட தேசிய விருதில் தமிழ் மொழியில் திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன் 1 ஆகிய படங்கள் தேசிய விருதை வென்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்காக இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோரும், திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடன இயக்குநர் சதிஷும் இன்று விருதுகள் பெறுகின்றனர். இவர்களுக்கு இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருது வழங்குகிறார். இந்நிலையில் தேசிய விருது எப்போது முதல் வழங்கப்படுகிறது, எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது, அதிக முறை வென்றவர்கள் யார் உள்ளிட்ட சிறப்பு தகவல்களை தற்போது காணலாம்.

  • தேசிய திரைப்பட விருதுகள் (National film awards) 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
  • மத்திய அரசின் திரைப்பட விழா அமைப்பின் மேற்பார்வையில் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்படுகிறது.
  • இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது தேசிய விருதாகும்.
  • தேசிய விருதுகள் Feature film, Non feature Film, Film writing என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு பிரிவிலும் 100 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை விமர்சனம் செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்படுகிறது.
  • தேசிய விருது வெல்லும் கலைஞர்களுக்கு சான்றிதழுடன், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.
  • Feature film பிரிவில் 6 படங்கள், Non feature Film பிரிவில் 2 படங்கள், சினிமாவில் சிறந்த கதை ஆகியவைக்கு தங்கப் பதக்கம் (Swarna kamal) வழங்கப்படுகிறது. அதேபோல் மற்ற பிரிவுகளில் வென்ற கலைஞர்களுக்கு வெள்ளிப் பதக்கம் (Rajat kamal) வழங்கப்படுகிறது.
  • இயக்குநர் சத்யஜித் ரே 6 முறை, அடூர் கோபாலகிருஷ்ணன் 5 முறை தேசிய விருதுகள் பெற்றதன் மூலம், அதிக முறை சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • பிரபல நடிகர் அமிதாப் பச்சன் அதிகபட்சமாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது (5 முறை), ஷபானா அஸ்மி அதிகபட்சமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருது (5 முறை) கங்கனா ராணாவத் (3 முறை) பெற்றுள்ளனர்.
  • அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் (4 முறை) மற்றும் இளையராஜா (4 முறை) முதலிடத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: "சந்தோஷத்தில் அழுதுவிட்டேன்" - தேசிய விருது வென்ற திருச்சிற்றம்பலம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பிரத்யேக பேட்டி! - 70th National film awards

  • மராத்தி திரைப்படம் ‘shyamchi Aai’ சிறந்த திரைப்பட பிரிவில் தேசிய விருது வென்ற முதல் படமாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.