ETV Bharat / entertainment

தி ஃபேமிலி ஸ்டார் முதல் வல்லவன் வகுத்ததடா வரை: களைக்கட்டும் கோலிவுட்.. ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்! - Kollywood New movie Release - KOLLYWOOD NEW MOVIE RELEASE

Kollywood New movie Release: நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கு மத்தியில் இன்று ஒரே நாளில் தி ஃபேமிலி ஸ்டார் முதல் வல்லவன் வகுத்ததடா வரை 6 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.

Kollywood New movie Release
ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 2:50 PM IST

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு மோசமான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க வரவேற்பு மற்றும் வெற்றியைப் பெறவில்லை. மாறாக மலையாள சினிமாக்கள் இங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நேரம் என்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கோடை விடுமுறையை அனைத்து படங்களும் குறிவைத்துள்ளன. கடந்த சில மாதங்களாகச் சிறிய முதலீட்டுப் படங்களே வெளியாகியுள்ளது. அப்படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் ரெபல் திரைப்படம் வெளியான நிலையில், நேற்று இயக்குநர் பி.வி சங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிகை இவானா, இயக்குநர் பாரதிராஜா, விஜய் டிவி தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்படப் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.வி சங்கர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

டபுள் டக்கர் - மீரா மகதி இயக்கத்தில், தீரஜ் நடிப்பில் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் ‘டபுள் டக்கர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்படப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பேன்டசி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள டபுள் டக்கர் இன்று திரையரங்கிற்கு வருகிறது.

ஒயிட் ரோஸ்(White Rose) - இயக்குநர் கே.ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ் உட்படப் பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ஒயிட் ரோஸ் இன்று திரையரங்கிற்கு வருகிறது. இப்படத்தினை ரஞ்சனி 'பூம்பாறை முருகன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.

இரவின் கண்கள் - இயக்குநர் சுரேஷ் குமரன் இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் இரவின் கண்கள். இப்படத்தில் இவருடன் இணைந்து டோலி ஐஷு, கிரி திவாரக்கிஷ், அழகு ராஜா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரதாப் தயாரிக்க, இசையமைப்பாளர் சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.

ஆலகாலம் - இயக்குநர் ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், தங்கதுரை, பாபா பாஸ்கர் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஆலகாலம் இன்று திரையரங்கிற்கு வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

ஒரு தவறு செய்தால் - இயக்குநர் மணி தாமோதரன் இயக்கத்தில் எம்.எஸ் பாஸ்கர், உபாசனா உட்படப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஒரு தவறு செய்தால். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே.எம் ராயன் இசையமைத்துள்ளார்.

வல்லவன் வகுத்ததடா - இயக்குநர் விநாயகத் துரை இயக்கத்தில் தேஜ் சரண்ராஜ், அனன்யா மணி, ராஜேஷ் பாலச்சந்திரன், ஸ்வாதி மீனாட்சி என பலர் நடித்திருக்கும் வல்லவன் வகுத்ததடா திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

தி ஃபேமிலி ஸ்டார் - விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படமும் தமிழில் டப் செய்யப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் நடிக்கும் திரைப்படங்களைப் பொக்கிஷமாகப் பார்ப்பேன்… மனம் திறந்த டாப்ஸி! - Taapsee Pannu About Her Films

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.