ETV Bharat / education-and-career

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தகுதி பெற்ற 198 பேருக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - TNPSC Group 1 Update - TNPSC GROUP 1 UPDATE

TNPSC Group 1 Update: குரூப் 1 தேர்வில் தகுதி பெற்ற 198 பேருக்கு பணியிடங்கள் வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 18 துணை ஆட்சியர்கள், 26 காவல்துணை கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், 13 கூட்டுறவுத்துறையின் துணைப் பதிவாளர்கள், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு குருப் 1 தேர்வில் தகுதிப்பெற்ற 198 பேருக்கு 12ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி குருப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. அதில், 18 துணை ஆட்சியர்கள், 26 காவல்துணை கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள்,13 கூட்டுறவுத்துறையின் துணைப் பதிவாளர்கள், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என சுமார் 92 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடரந்து, குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டு முதல் நிலைத் தேர்வு முடிந்த நிலையில் தற்போது, மதிப்பெண் அடிப்படையில் சிலரே முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்றனர். அதில் தகுதி பெற்றவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மே மாதம் 8ஆம் தேதி முதல் மே மாதம் 16ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு 2023 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெற்றது.

இந்த தேர்வில், ஒரு பணியிடத்திற்கு சுமார் 20 பேர் வீதம் தேர்வு எழுதுவதற்கு அழைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்காணல் நடத்தப்பட்டது. தற்பொழுது குருப் 1 பணியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான 198 நபர்களின் தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு பணியிடங்கள் வழங்குவதற்கான கலந்தாய்வு ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தரவரிசைப் பட்டியலில் 587.25 மதிப்பெண் பெற்று முதலித்தையும், 582.75 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும் பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு! - NEET Exam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.