ETV Bharat / education-and-career

நெல்லை பல்கலை சிண்டிகேட் நியமனத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் - SFI ஆர்ப்பாட்டம்! - SFI PROTEST IN TIRUNELVELI

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் நியமித்த சவீதா ராஜேஷின் சிண்டிகேட் நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம், ஏபிவிபி மாநில தலைவர் சவிதா ராஜேஷ்
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம், ஏபிவிபி மாநில தலைவர் சவிதா ராஜேஷ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 1:20 PM IST

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிப் பேரவை என்று அழைக்கப்படும் சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ், ஆளுநர் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் 3 பேரை தமிழக ஆளுநர் நியமனம் செய்யலாம். அந்த வகையில், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக எபிவிபி மாநில தலைவர் சபிதா ராஜேஷை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கைக்கு கழகமும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவை சேர்ந்த ஏபிவிபி மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ் சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: உச்சமடைந்த வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ!

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கல்வி நிலையங்களில் புகுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார் என முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமதித்து விட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பெயர் தாங்கிய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவது நகைப்புக்குரியது என்று கண்டனம் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். எனவே, உடனடியாக சவீதா ராஜேஷ் சிண்டிகேட் நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.