ETV Bharat / education-and-career

க்யூ.எஸ் உலக பல்கலை. தரவரிசை: ஜேஎன்யு பல்கலைக்கழகம் புது மைல்கல்! தமிழக கல்வி நிறுவனம் சாதனை! - QS Wolrd University Rankings

QS Rankings: லண்டனை சேர்ந்த க்யூ.எஸ் அமைப்பு வெளியிட்ட உலக உயர்க் கல்விக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 69 பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. குறிப்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 20வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சவீதா கல்வி நிறுவனம் 24வது இடத்தை பிடித்து உள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 6:18 PM IST

டெல்லி : உயர்க் கல்வி குறித்து உலகளவில், லண்டன் நாட்டைச் சேர்ந்த க்யூ.எஸ் (QS - குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆசியா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்கள் இதில் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியல் க்யூ.எஸ் அமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் முறையாக டாப் 20 வரிசைக்குள் நுழைந்து சாதனை படைத்து உள்ளது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக 69 இந்திய கல்வி நிறுவனங்கள் இந்த தரவரிசை பட்டியலில் பட்டியலிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த 424 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இணைந்து உள்ளதாகவும் இது கடந்த ஆண்டை காட்டிலும் 19 புள்ளி 4 சதவீதம் அதிகம் என்றும் க்யூ.எஸ் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லி ஜேன்யு பல்கலைக்கழகம் 20வது இடம் பிடித்து உள்ளது.

அதேபோல் ஐஐஎம் அகமதாபாத் டாப் 25 இடங்களிலும், ஐஐஎம் பெங்களூரு மற்றும் ஐஐஎம் கல்கட்டா டாப் 50 வரிசையிலும் இடம் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனமான சவீதா இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் மற்றும் டெக்னிக்கல் சயின்சஸ் கல்வி நிறுவனம் உலக அளவில் 24வது இடத்தை பிடித்து உள்ளது.

இந்தியாவில் உயர்தர உயர்க் கல்வி முறை மேம்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து வழக்கத்திற்கு மாறாக பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக க்யூ.எஸ் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜெசிக்கா டர்னர் தெரிவித்து உள்ளார். ஆசியாவிலேயே உயர்க் கல்வி வளர்ச்சியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது.

முதலிடத்தில் சீனா உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. க்யூ.எஸ் அமைப்பின் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 69 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ள நிலையில், சீனாவில் 101 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன. கடந்த ஆண்டு க்யூ.எஸ் அமைப்பின் தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 45 கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நடப்பாண்டி அது அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா? என்ன காரணம்? பாஜகவில் இணைய திட்டமா? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.