சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள 85 இடங்களுக்கு சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வு நவம்பர் 25 ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும், அன்னை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களில் மாணவர்கள் மறு ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாகவும், ஸ்டே வேகன்சி கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது.
இதில் 7 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள் நிரப்பப்படமால் இருக்கிறது. மேலும் தேசிய மருத்துவ ஆணையம் அன்னை மருத்துவ கல்லூரிக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 50 இடங்களுக்கு அனுமதி வழங்கியது.
இதையும் படிங்க |
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அன்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 50யில் இருந்து 100 இடமாக உயர்த்தப்பட்டது. இந்த இடங்களுக்கு மாணவர்கள் மறு ஒதுக்கீட்டிற்கும் விண்ணப்பம் செய்யலாம்.
எனவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்குழு சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வு 25ம் தேதி முதல் நடத்த உள்ளது.
சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வில் தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு வெயிட்டுள்ள தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை முடிந்துள்ள 4 சுற்று கலந்தாய்விலும் கலந்து கொள்ளாத மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.
நடைபெற உள்ள மருத்துவ படிப்பு இடங்களை மாணவர்கள் ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பிறகு கல்லூரிகளுக்கு செல்லவில்லை என்றால் பாதுகாப்பு வைப்பு நிதி, கல்வி கட்டணம் உள்ளிட்டவை திரும்ப தரப்படாது. மேலும் 1 ஆண்டு காலம் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது எனவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்