ETV Bharat / education-and-career

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: மருத்துவ கல்வி இயக்குநர் சங்கு மணி தகவல் - Medical College Admission date - MEDICAL COLLEGE ADMISSION DATE

Medical College Admissions start tomorrow: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 1:56 PM IST

Updated : Jul 30, 2024, 2:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளில், 2024 - 2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கு ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்வி இயக்குநர் சங்கு மணி (Video Credit - ETV Bharat Tamilnadu)

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு அட்டவணையை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நேற்று அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூலை 31ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 8 தேதி மாலை 5 மணி வரை www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்சி ஏ மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனை இடங்கள்?: கடந்த 2023 - 24ஆம் கல்வி ஆண்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5,550 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரியில் 3,400 இடங்களும் மூன்று தனியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் 450 இடங்கள் என 9,050 இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பிலும், வீடியோஸ் படிப்பில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 1,950 இடங்கள் என மொத்தமாக 2200 இடங்களும் உள்ளன.

இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் நிரப்பப்படும். இதற்கான கலந்தாய்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினால் நடத்தப்படும். மீதம் உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு மூலம் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்படும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கையான கலந்தாய்வு ஆகஸ்ட் 3 வது வாரம் (ஆகஸ்ட் 21ஆம் தேதி) தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் தகவல் தொகுப்பேட்டினை முழுவதுமாக படித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும், கலந்தாய்வு முழுவதும் ஆன்லைன் முறையில் மட்டுமே நடைபெறுவதால் யாரும் நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு வரத் தேவையில்லை. விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால் போதும்" என்று சங்கு மணி தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆக.14 முதல் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு துவக்கம்!

Last Updated : Jul 30, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.