ETV Bharat / education-and-career

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர கலந்தாய்வு எப்போது? - VETERINARY COURSE COUNSELLING DATE - VETERINARY COURSE COUNSELLING DATE

Veterinary course Consultation Date: கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 6:24 PM IST

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்கள், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்கள், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்கள் என 660 இடங்கள் உள்ளன.

மேலும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்கள், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்கள், கோடுவளி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு 14 ஆயிரத்து 474 மாணவர்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சேர 3 ஆயிரம் பேர் என 17 ஆயிரத்து 474 பேர் விண்ணப்பம் செய்தனர்.

தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, பிடெக் படிப்புகளில் சிறப்பு பிரிவு மாணவர்களாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதியும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதியும், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்ப படிப்பிற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 6ஆம் தேதியும் நேரடியாக சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும்.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு பட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக நடைபெறும்.

மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 11ஆம் தேதி இணையதளத்தில் கல்லூரி ஒதுக்கீடு விவரம் வெளியிடப்படும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்ற நிர்வாகி மரணம்.. வெளியான முக்கிய கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.