சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் துவங்கியுள்ளது. அதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவுகளை வழங்கி துவக்கி வைத்தார்.
மேலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு வாகனத்தையும் கொடிய சேர்த்து துவக்கி வைத்ததுடன் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அங்கிருந்து மக்களுக்கும் பேருந்துகளில் சென்றவர்களுக்கும் வழங்கினார்.
அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைவாக இருந்து வருகிறது மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்காக விழிப்புணர்வு பேரணியில் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திருந்தது.
மேலும், மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரச்சாரங்கள் வழங்கியும் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு மலர்மாலை அறிவித்து வரவேற்றத்துடன் அவர்களுக்கு சேர்க்கை அணைகளையும் புத்தகத்தை உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
அரசு பள்ளியில் உள்ள சலுகைகள்: அரசு பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
பள்ளிக் கல்வியில் தொழில்நுட்ப விரிவாக்கம் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதலுடன் சேர்த்து எண்ணிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை (Digital Technology) முன்னெடுப்பு நிகழ்வாகத் தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை டிஜிட்டல் முறையில் தகவல்களைப் பெற ஏதுவாக 3 ஆயிரத்து 90 அரசு உயர்நிலைப் பள்ளிகளில், பள்ளிக்கு 10 கணினிகளும், 2 ஆயிரத்து 939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 29 பள்ளிகளுக்கு 5 அல்லது 6 Mbps வேகம் கொண்ட அகண்ட அலை வரிசைக் கற்றல் வசதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு