சென்னை: மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதிலிருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. அந்த வகையில், ஆகஸ்ட் 17ம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாயும், கிராமுக்கு 105 ரூபாயும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் காரணமாக, எப்போது இல்லாத அளவிற்கு தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படிப்படியாக சரிவை தொட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.840 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை: சென்னையில் இன்று, 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670-க்கும், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும், ஒரு சவரன் ரூ.50,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நேற்று வெள்ளி விலை கிராம் ரூ.89 ஆக விற்பனையான நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.91-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்