சென்னை: தங்க நகை என்பது அழகையும், ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் பொருளாக இருப்பதைவிட சாமானிய மக்களுடைய சேமிப்பின் ஆதாரமாக விளங்குகிறது. தங்கம் வாங்குவது என்பது சாமானிய மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாளாகவே தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே தங்கத்தின் விலையை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை முதலீட்டாளர்களும், இல்லத்தரசிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.784 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 392க்கு விற்பனை; மேலும், வெள்ளியின் விலை இன்று மீண்டும் ரூபாய் 100-ஐத் தாண்டியுள்ளது. நேற்றைய விலையில் ரூ.1 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.100.50 காசுகள் என ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் ரூ.1 லட்சத்து 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூலை 17):-
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.6,920
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.55,360
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ. 7,549
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ. 60,392
- 1 கிராம் வெள்ளி - ரூ.100.50
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,00,500
இதையும் படிங்க: ஆடி முதல் நாளே தள்ளுபடி விற்பனை.. காரைக்குடியில் பட்டுப்புடவை வாங்க குவிந்த பெண்கள்!