சென்னை: தங்கம் என்பது அழகையும், ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் பொருளாக இருப்பதைவிட சாமானிய மக்களின் சேமிப்பு பொருளாக உள்ளது. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் தங்கம் நகையும் ஒன்று. மேலும், தங்கம் வாங்குவது சாமானிய மக்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. மேலும், தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், ஜூன் 4ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 உயர்ந்த நிலையில், நேற்று வெறும் ரூ.160 குறைந்த சவரன் ரூ.53 ஆயிரத்து 800க்கு விற்பனையானது. ஆனால், இன்று எதிர்பாராத வகையில், சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. இதனால், நகை முதலீட்டாளர்கள் மற்றும் நகைப் பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையில் இன்று (ஜூன் 6) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூன் 6):
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.6,800
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.54,400
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.7,418
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.59,344
- 1 கிராம் வெள்ளி - ரூ.98
- 1 கிலோ வெள்ளி - ரூ.98,000