சென்னை: இந்தியர்களின் சேமிப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டு வந்த தங்கம், தற்போது குறைவை நோக்கி பயணிக்கிறது எனலாம்.
மே மாத இறுதியில் மளமளவென விலை அதிகரித்த தங்கம், ஜூன் மாதத்தின் முதல் நாளே சற்று குறைந்தது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது, சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.53 ஆயிரத்து 680-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53 ஆயிரத்து 328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ரூ.44 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 666 ஆகவும், சவரன் ரூ.53 ஆயிரத்து 328 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 272-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.97.30-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.97 ஆயிரத்து 300-க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூன் 1):
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.6,666
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.53,328
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.7,272
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.58,176
- 1 கிராம் வெள்ளி - ரூ.97.30
- 1 கிலோ வெள்ளி - ரூ.97,300