ETV Bharat / business

தாறுமாறாக அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன? - Today Gold and Silver rate - TODAY GOLD AND SILVER RATE

Gold And Silver Rate in Chennai: கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தில் விலை இன்று (மே 29) சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் (கோப்புப்படம்)
தங்கம் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 11:14 AM IST

சென்னை: இந்தியர்களின் சேமிப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பெரிதளவில் இந்த தங்கம் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வருட துவக்கத்தில் இருந்தே பெரிதளவில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை, தற்போது ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டு வந்த தங்கம், குறையும்போது மட்டும் சிறிதளவு குறைவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சென்னையில் இன்று (மே 29) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை: தாறுமாறாக அதிகரித்து வந்த தங்கம் விலைக்கு மத்தியில், தற்போது வெள்ளி விலையும் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக வெள்ளி ஒரு கிராம் 100-ஐக் கடந்து விற்பனையாகிறது. அதாவது, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.20 உயர்ந்து, ரூ.102.20-க்கும், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (மே 29):

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,775
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.54,200
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,391
  • 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.59,128
  • 1 கிராம் வெள்ளி - ரூ.102.20
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,02,200

இதையும் படிங்க: இந்தியாவில் தலைவிரித்தாடும் ஃபெடெக்ஸ் கூரியர் மோசடி.. சைபர் குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.