சென்னை: இந்தியப் பொருளாதார மந்தநிலை காரணமாகவும், பணவீக்கம் மற்றும் சர்வதேச அளவிலான பல மாற்றங்கள் காரணமாகவும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. இருப்பினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாகக் குறைந்து, ரூ.54 ஆயிரத்து 320 ஆக விற்பனையானது.
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து 55 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. தற்போது ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் சென்னையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 875-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, சவரன் ரூ.54 ஆயிரத்து 960-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.90 ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 16):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,870
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.54,960
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,495
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.59,960
- 1 கிராம் வெள்ளி - ரூ.90.50
- 1 கிலோ வெள்ளி - ரூ.90,500
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,320 என சென்னையில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.