சென்னை: இந்திய மக்களின் சேமிப்பில் எப்போதுமே முக்கியப் பங்கு வகிப்பது தங்கம். ஆனால், சமீப காலமாகவே தங்கத்தின் விலை கடும் ஏறுமுகத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. இதனால் நகை முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும், சேமிப்பு, பரிசு என இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. ஆகையால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால், தற்போது ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.51,120 ஆக விற்பனையாகி வருகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 390க்கும், ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.80 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் 29 இன்றைய விலை நிலவரம்:
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,390
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.51,120
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,971
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.55,768
- 1 கிராம் வெள்ளி - ரூ.80.80
- 1 கிலோ வெள்ளி - ரூ.80,800
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம்:
தேதி | 22 கேரட் |
மார்ச் 29 | ₹6,390 |
மார்ச் 28 | ₹ 6,250 |
மார்ச் 27 | ₹ 6,215 |
மார்ச் 26 | ₹ 6,200 |
மார்ச் 25 | ₹ 6,205 |