ETV Bharat / business

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு.. சென்னை ஒரு சவரன் எவ்வளவு? - Today Gold and Silver Rate - TODAY GOLD AND SILVER RATE

Today Gold and Silver Rate: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, இன்று (மார்ச் 29) கிராமுக்கு ரூ.130 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,390 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today Gold and Silver Rate
Today Gold and Silver Rate
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 11:29 AM IST

சென்னை: இந்திய மக்களின் சேமிப்பில் எப்போதுமே முக்கியப் பங்கு வகிப்பது தங்கம். ஆனால், சமீப காலமாகவே தங்கத்தின் விலை கடும் ஏறுமுகத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. இதனால் நகை முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், சேமிப்பு, பரிசு என இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. ஆகையால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால், தற்போது ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.51,120 ஆக விற்பனையாகி வருகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 390க்கும், ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.80 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் 29 இன்றைய விலை நிலவரம்:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,390
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.51,120
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,971
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.55,768
  • 1 கிராம் வெள்ளி - ரூ.80.80
  • 1 கிலோ வெள்ளி - ரூ.80,800

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம்:

தேதி 22 கேரட்
மார்ச் 29 ₹6,390
மார்ச் 28₹ 6,250
மார்ச் 27₹ 6,215
மார்ச் 26₹ 6,200
மார்ச் 25₹ 6,205

இதையும் படிங்க: ஆசியாவின் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை தேர்வு! பீஜிங்கை பின்னுக்குத் தள்ளி சாதனை! - Asia Billionaire Capital

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.