ETV Bharat / business

ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு! ஏற்றுமதி தரவுகள் சொல்வது என்ன? - tamilnadu export data - TAMILNADU EXPORT DATA

Tamilnadu export data: 2023ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடைய, தமிழ்நாடு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரும் வேளையில், மின்னணு பொருட்கள், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

Tamilnadu export data
Tamilnadu export data
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 11:02 PM IST

சென்னை: வணிகம் மற்றும் ஏற்றுமதி சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கும் அரசு சிந்தனைக் குழுவான நிதி அயோக் (NITI Aayog) 2023-24 ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான சூழல் இருக்கும் மாநிலங்களை கண்டறிந்து வெளியிடப்பட்ட தரவரிசையில் தமிழ்நாடு முதல் இடத்தையும், மகாராஷ்ட்ரா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. மின்னணு, தோல் பொருட்கள், ஜவுளி ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதி: 2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு 7.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்து, முதல் இடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம் 3.55 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இந்தியா 22.65 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

முந்தைய நிதியாண்டில், தமிழ்நாடு 5.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்தது. அதன் படி எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் தமிழ்நாடு கணிசமான எழுச்சியை கண்டு வருகிறது. தமிழ்நாடு முதலீடுகளை ஈர்ப்பது, புதுமைகள் மற்றும் தொழில் முனைவோரை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வருவதால் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ், சோனி, ஃபாக்ஸ்கான் போன்ற மின்னணு உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியில் ஈடுபடுவது மாநிலத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி ஆலை தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம், உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு, அபார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது என மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்ற நிலை தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

ஜவுளித் துறையில் தமிழகம் முதலிடம்: இந்திய அளவில் ஜவுளித் துறையில் தமிழ்நாடு 5 ஆயிரத்து 845 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஜவுளிகளை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்தியா 27 ஆயிரத்து 707 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

அதேபோல் பொறியியல் சார்ந்த உபகரணங்களில், 13 ஆயிரத்து 828 மில்லியன் டாலர் மதிப்புள்ள இன்ஜினியரிங் பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்ட்ரா 18 ஆயிரத்து 954 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

வேளாண் துறையிலும் தமிழ்நாடு முதலிடம்: தொழில்நுட்பம், ஜவுளி, பொறியியல் துறைகளை தவிர்த்து தமிழ்நாடு வேளாண் துறையிலும் கொடி கட்டி பறக்கிறது. பழம் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியில் தமிழகம் 251 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. பருத்தி ஏற்றுமதியில் ஆயிரத்து 692 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களையும், முந்திரி ஏற்றுமதியில் 55 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தும் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தென் இந்தியா முன்னிலை: இந்தியாவில் காபி உற்பத்தியில் கர்நாடாக, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய தென் இந்திய மாநிலங்கள் முதன்மை வகிக்கின்றன. அதேபோல், முந்திரி உற்பத்தியில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அதிகளவில் உற்பத்தி செய்து முதல் 4 இடத்தை பெற்றுள்ளன.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர் மாநாடு 2024; டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.