ETV Bharat / business

நம்பர் ஒன் பணக்காரர் பட்டத்தை இழந்த எலான் மஸ்க்! அடித்தது அம்பானிக்கு யோகம்! எத்தனையாவது இடம் தெரியுமா? - Elon Musk - ELON MUSK

Bernard Arnault: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட். இந்திய அளவில் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.

Elon Musk-Bernard Arnault
எலான் மஸ்க்-பெர்னார்ட் அர்னால்ட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:33 PM IST

ஹைதராபாத்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் லூயி வுய்டன் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட்.

ஆடம்பர பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான லூயி வுய்டனின் (LVMH) பங்கு கடந்தாண்டு 30 சதவீதம் அதிகரித்ததால் பெர்னார்ட் அர்னால்டில் செத்து மதிப்பு 207.6 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் அர்னால்ட்.

அமெரிக்காவைச் சேர்ந்த வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes) நடத்திய ஆய்வுகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பங்குகளின் சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரார் என்ற இடத்தை இழந்தார்.

இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக இவர் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தில் (x தளம்) செய்த பல்வேறு அதிரடி மாற்றங்களால் பல வாடிக்கையாளர்கள் xதளத்தை விட்டு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இதன் காரணமாக xதளத்தின் பங்குகள் குறையத் தொடங்கின, எலான் மஸ்க் 2ஆம் இடம் சென்றதற்கு இதுவும் ஒரு காரணமாக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெஸ்லாவின் பங்குகள் உயரத் தொடங்கின, இதன் காரணமாக எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட் முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில் மீண்டும் பெர்னார்ட் அர்னால்டின் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது.

மற்றொருபுறம் டெஸ்லாவின் பங்குகள் சரிவைக் கண்டு வருகின்றன, இதனால் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்டின். இந்த இரண்டு கோடீஸ்வரர்களும் 2022 ஆம் ஆண்டு முதல் மாறி மாறி முதலிடத்தைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் பார்க்கையில் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:

  • பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டாலர்)
  • எலான் மஸ்க் (204.7 பில்லியன் டாலர்)
  • ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்)
  • லாரி எலிசன் (142.2 பில்லியன்டாலர்)
  • மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டாலர்)
  • வாரன் பஃபெட்(127.2 பில்லியன் டாலர்)
  • லாரி எலிசன் (127.1 பில்லியன்டாலர்)
  • பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டாலர்)
  • செர்ஜி பிரின் (121.7 பில்லியன்டாலர்)
  • ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன்டாலர்)

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11-ம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 16வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 104.4 பில்லியன் டாலரும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.