சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்து தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
புத்தாண்டின் முதல் மாதத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடனே காணப்பட்டது. இந்நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் நேற்று 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து ரூ.5,880-க்கும், சவரனுக்கு ரூ.240 விலை உயர்ந்து ரூ.47 ஆயிரத்து 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கமும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 350க்கும் சவரன் ரூ.50 ஆயிரத்து 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் நேற்று கிராம் ரூ.6 ஆயிரத்து 320க்கும் சவரன் ரூ.50 ஆயிரத்து 560க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 பைசா குறைந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!