சென்னை: இந்தியர்களின் சேமிப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பெரிதளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகையால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இம்மாதத் துவக்கத்தில் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 840க்கு விற்பனையானது. அதனையடுத்து தினமும் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த மார்ச் 9ஆம் தேதி 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 150க்கும், ஒரு சவரன் ரூபாய் 49 ஆயிரத்து 200க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.79.10க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 79 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், இன்று (மார்ச் 13) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூபாய் 48,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 6 ஆயிரத்து 110 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து ரூபாய் 48 ஆயிரத்து 880க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 580க்கும், ஒரு சவரன் ரூபாய் 52 ஆயிரத்து 640க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 78 ஆயிரத்து 500க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 78.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேதி | தங்கம் விலை கிராமில் (22K) |
மார்ச் 4 | ₹ 5,930 |
மார்ச் 5 | ₹ 6,015 |
மார்ச் 6 | ₹ 6,040 |
மார்ச் 7 | ₹ 6090 |
மார்ச் 8 | ₹ 6,105 |
மார்ச் 9 | ₹ 6,150 |
மார்ச் 10 | ₹ 6,150 |
மார்ச் 11 | ₹ 6,150 |
மார்ச் 12 | ₹ 6,150 |
மார்ச் 13 | ₹ 6,110 |
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்த மாதாந்திர குடும்பச் செலவு.. ஆய்வு முடிவு கூறுவது என்ன?