சென்னை:தமிழகத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் கோயம்பேடு மார்கெட்டிற்கு, பல ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகளை வாங்கி செல்வார். இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன.
அப்படி வந்து குவியும் காய்கறிகளை வியாபாரிகளும், பொதுமக்களும் அவரவர் தேவைக்கேற்ப வாங்கிச் செல்வர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து 25 ரூபாய்க்கு முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் வெங்காயமானது கடந்த வாரம் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது 30 ரூபாய் முதல் 38 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வரத்துக் குறைவால் கேரட் மற்றும் பீட்ரூட் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. இதே போல் ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று கோயம்பேடு மார்க்கெட்டின் காய்கறி விலை குறித்துப் பார்ப்போம்.
கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை: ஊட்டி கேரட் ரூ.90- 120, பீட்ரூட் ரூ.80 உருளை ரூ.35-50, சின்ன வெங்காயம் ரூ.50-70, பெங்களூர் கேரட் ரூ.30, முள்ளங்கி ரூ.25, முட்டை கோஸ் ரூ.20-25, வெண்டைக்காய் ரூ.20-30, கத்திரிக்காய் ரூ.35-50, பாவக்காய் ரூ.50, புடலங்காய் ரூ.30 சுரக்காய் ரூ.20, சேனைக்கிழங்கி ரூ.70, முருங்ககாய் ரூ.40க்கும் விற்க்கப்படுகிறது.
அதே போல் சேமகிழங்கு ரூ.40, காலிபிளவர்ரூ. 50, வெள்ளரிக்காய் ரூ.25, பச்சை மிளகாய் ரூ.45, பட்டாணி ரூ.150, இஞ்சி ரூ.125, பூண்டு ரூ.120, அவரைக்காய் ரூ.40, மஞ்சள் பூசணி ரூ.20, பீர்க்கங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, நூக்கள் ரூ.40, கோவைக்காய் ரூ.25, கொத்தவரங்காய் ரூ.40, வாழைக்காய் ரூ.8 மாங்காய் ரூ.50/40, தேங்காய் ரூ. 25ரூபாய் 30 வரை விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய திட்டம்? - வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பரபரப்பு.. சாலை மறியலால் சலசலப்பு!