டெல்லி : இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, தனது மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் மருமகள் அபர்ணா கிருஷ்ணன் தம்பதியினருக்குப் பிறந்த மகன் எக்கிரஹா ரோஹன் மூர்த்திக்கு, இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை பரிசாக வழங்கினார். இதன் பங்குச் சந்தை மதிப்பு 210 கோடி ரூபாயாக இருந்தது அனைவரும் அறிந்தது. இதன் மூலம் மிக குறைந்த வயதில் கோடீஸ்வரராக எக்கிரஹா ரோகன் மூர்த்தி ஆனார்.
இந்நிலையில், 2024 நிதி ஆண்டுக்கான இறுதி ஈவுத்தொகையான டிவிடென்ட் பண்ட் தொகையை இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் ஒரு பங்குக்கு 20 ரூபாய் மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக 8 ரூபாயும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பு மூலம் இன்போசிஸ் பங்குகள் வைத்திருக்கும் அனைவருக்கும் இரட்டிப்பான பணத்தை பெற உள்ளனர்.
அதேநேரம் எக்கிரஹா ரோஹன் மூர்த்தி வைத்திருக்கும் பங்குகளுக்கு ஈவுத்தொகை கணக்கிடப்பட்ட நிலையில் அவருக்கு 4 கோடியே 20 லட்ச ரூபாய் ஈவுத் தொகை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்போசிஸ் நிறுவனர்கள் மத்தியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது நாராயணமூர்த்தியின் குடும்பம் என்பதால் ஒரே நாளில் எக்கிரஹா ரோஹன் மூர்த்தி கோடிகளை சம்பாதித்து உள்ளார்.
இதையும் படிங்க : கேரளாவில் மூதாட்டியின் வாக்கை செலுத்தினாரா சிபிஎம் தலைவர்! வைரலாகும் சிசிடிவி! தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்! - Lok Sabha Election 2024