மதுரா : உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் ஷாபூர் செயின்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்யவீர் சிங், வயது 27. மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை நேற்று (ஏப்.16) வெளியிட்டது. அதில் சத்யவீர் சிங் 710வது ரேங்க் எடுத்து உள்ளார்.
மேலும், முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியும் பெற்று உள்ளார். இந்நிலையில், யமுனா நதிப் படுகையில் சத்யவீர் சிங் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கும், அவர்து உறவினர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. உள்ளூர் மக்கள் ஆற்றில் சடலம் மிதப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் அதில் சத்யவீர் சிங் என்பது தெரியவந்து உள்ளது. மீடகப்பட்ட சத்யவீர் சிங்கின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சத்யவீர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் தான் டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது.
சத்யவீர் சிங் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மரணத்திற்கு வேறெதும் காரணங்கள் இருக்கா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேநேரம் சத்யவீர் சிங் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் போலீசார் இந்த விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொள்ள மறுப்பதாகவும் என்றும் சத்யவீர் சிங்கின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சத்யவீர் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்தால் மட்டுமே அவரது இறப்புக்கான காரணம் என்ன என தெரிய வரும் என்றும் அதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result