ETV Bharat / bharat

தாதா - அரசியல்வாதி - சிறைவாசி.. யார் இந்த முக்தார் அன்சாரி? - who is mukhtar ansari

Mukhtar Ansari: 15 வயதில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கி, பிரபல தாதாவாக வலம் வந்து, 63 வயதில் அரசியல்வாதியாக சிறைவாசத்தில் இருந்த நிலையில், மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள முக்தார் அன்சாரி யார், அவர் கடந்து வந்த அரசியல் மற்றும் சிறைப் பயணங்கள் குறித்து காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 9:52 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடியாக இருந்து, அரசியல்வாதியாக மாறி, பின்னர் சிறை சென்ற முக்தார் அன்சாரி, நேற்று (மார்ச் 28) இரவு 10.30 மணியளவில் மாரடைப்பால் பாண்டா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 63. ஆனால், அவரது மகன் உமர் அன்சாரி, தனது தந்தையான முக்தார் அன்சாரிக்கு சிறையில் விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், முக்தார் அன்சாரியின் சகோதரரும், காசிப்பூர் எம்பியுமான அஃப்சல் அன்சாரியும், சிறையில் அன்சாரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அஃப்சல் மேலும் கூறுகையில், “விஷம் கலந்த உணவு சிறையில் தனக்கு கொடுக்கப்பட்டதாக முக்தார் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு கொடுக்கப்படுவது இரண்டாவது முறை ஆகும். கிட்டத்தட்ட 40 நாட்கள் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

யார் இந்த முக்தார் அன்சாரி? கடந்த 1963ஆம் ஆண்டு செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த முக்தார் அன்சாரி, தனது 15வது வயதில், அதாவது 1978ஆம் ஆண்டு காசிப்பூரில் உள்ள சைத்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது முதல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அடுத்த பத்து வருடத்தில் தாதா உலகில் நன்கு தெரிந்த முகமாக மாறிய அன்சாரி மீது, 1986ஆம் ஆண்டு காசிப்பூரின் முகம்மது காவல் நிலையத்தில் வேறு ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த 10 வருடங்களில் 14 குற்ற வழக்குகள் முக்தார் அன்சாரி மீது பதிவு செய்யப்பட்டன.

முக்தார் அன்சாரியின் அரசியல் பயணம்: 1996ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் கட்சியின் மெள சட்டமன்ற உறுப்பினராக முக்தார் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, 2002 மற்றும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, குவாமி ஏக்தா தள் என்ற கட்சியைத் தொடங்கிய முக்தார் அன்சாரி, மீண்டும் மெள தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டிலும் மெள தொகுதியில் அன்சாரி எம்எல்ஏ ஆனார்.

முக்தார் அன்சாரி மீதான வழக்குகளும் தண்டனைகளும்: 2005ஆம் ஆண்டு முதல் அவரது இறப்பு வரை அன்சாரி உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது கொலை மற்றும் உத்தரப்பிரதேச கேங்ஸ்டர் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 8 குற்ற வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டு, வெவ்வேறு நீதிமன்றங்களில் விசாரணையைச் சந்தித்துள்ளார்.

குறிப்பாக, இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், 37 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1990-இல் ஆயுத உரிமத்தை மோசடியாக பெற்றது தொடர்பான வழக்கில், அன்சாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி வாரணாசி எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், அன்சாரிக்கு 2.02 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனை விதிப்பு என்பது கடந்த 18 மாதங்களில் வழங்கப்பட்ட 8வது வழக்கிற்கான தண்டனை ஆகும். அதேநேரம், இது முக்தார் அன்சாரிக்கு விதிக்கப்பட்ட இரண்டாவது ஆயுள் தண்டனை ஆகும்.

மேலும், டிசம்பர் 15, 2023 அன்று, பாஜக தலைவரும், நிலக்கரி தொழிலதிபருமான நந்த் கிஷோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தொடராததற்காக, மகாவீர் பிரசாத் ருங்டா என்பவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக பதிவான வழக்கில் அன்சாரிக்கு வாரணாசி எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

அதேபோல், அக்டோபர் 27, 2023 அன்று, காஜிபூர் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்சாரிக்கு எதிராக 2010ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் மற்றும் 5 லட்சம் அபராதமும் விதித்தது.

இதனையடுத்து, ஜூன் 5, 2023 அன்று, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், தற்போதைய உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவருமான அஜய் ராயின் மூத்த சகோதரரான அவதேஷ் ராய் கொல்லப்பட்ட வழக்கில், வாரணாசி எம்பி, எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்ந்து, ஏப்ரல் 29, 2023 அன்று, பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொல்லப்பட்ட வழக்கில் காஜிபூர் எம்பி, எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம், அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச், செப்டம்பர் 23, 2022 அன்று, லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் 1999இல் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தில் அன்சாரிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது மட்டுமல்லாமல், ரூ.50,000 அபராதமும் விதித்தது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்? - படிப்படியாக குறைக்கப்படுகிறதா ராணுவம்? என்ன திட்டம்? - AFSPA Removal From Kashmir

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.