ETV Bharat / bharat

"முதல் வேலையா இதை செய்யுங்க".. ஜம்மு -காஷ்மீரின் புதிய அரசுக்கு முன்னாள் முதல்வர் வைத்த வெயிட்டான கோரிக்கை!

காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை அளித்து வந்த 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி (Credits - ANI)

ஶ்ரீநகர்: ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான ஒமர் அப்துல்லா, புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தேர்தல் முடிவுகள் வெளியானதும் தெரிவித்திருந்தார்.

அவர் சொன்னபடியே, தால் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஷர் -இ- காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஜம்மு -காஷ்மீரின் புதிய முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த விழாவில் பங்கேற்ற பின், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஐந்தாண்டுகளுக்கு பிறகு, ஜம்மு -காஷ்மீர் இறுதியாக அதன் நிலையான அரசை பெற்றுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து, இ்ப்புதிய அரசு, சட்டமன்றத்தில் முதல் தீர்மானத்தை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரின் முதல்வரானார் உமர் அப்துல்லா.. வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

மத்திய அரசின் நிர்வாக்ததின் கீழ் கடந்த ஐந்தாண்டுகளாக ஜம்மு -காஷ்மீர் மக்கள் நிறைய இன்னல்களை அனுபவித்துவிட்டனர். அவர்கள் நம்பிக்கை மற்றும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் இப்புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், மக்களின் மனக்காயங்களை ஆற்றும் விதத்திலும் புதிய அரசு செயல்பட வேண்டும்.

காங்கிரஸ் அங்கம் வகிக்குமந் இந்தியா கூட்டணிக்கு ஜம்மு -காஷ்மீரில் சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவதையே இத்தேர்தல் முடிவு உணர்த்தி உள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்" என்று மெஹபூரா முஃப்தி கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.