ETV Bharat / bharat

"மோடியின் உத்தரவாதம்...." புல்லட் ரயில் முதல் இ-ஷ்ரம் போர்ட்டல் வரை... பாஜக தேர்தல் அறிக்கை கூறுவது என்ன? - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியாகி உள்ளது. தேர்வு தாள் லீக் விவகாரத்தில் கடுமையான சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 1:28 PM IST

டெல்லி : ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், தேர்வு தாள் லீக் விவகாரத்தில் கடுமையான சட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கிறது.

மேலும், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளன. குறிப்பாக விக்‌ஷித் பாரத் திட்டத்தின் நான் தூண்களான பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இளைஞர் சக்தி, ஏழைகள் மற்றும் விவசாயிகள் வளர்ச்சி குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, பைப் லைன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு விநியோகம், சூரிய மின்சக்தி மூலம் அனைவருக்கும் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார். குறிபிட்டு சொல்லும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் பட்டியல் மற்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையின் பிரதான வாக்குறுதிகளாக அங்கம் வகிக்கின்றன.

2025ஆம் ஆண்டை ஜனஜத்தியா பழங்குடியின மக்கள் ஆண்டாக அழைப்பது, உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது, உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவது, அயோத்தியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவது, உலகளவில் ராமாயண உற்சவ விழா கொண்டாட ஏற்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மேலும், 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த நடவடிக்கை, வடமாநிலங்களில் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது, கல்விக் கொள்கை 3 கோடிக்கும் அதிகமான பெண் செல்வந்தர்களை உருவாக்குவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு, மஹிலா சக்தி வந்தன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளன.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகளவில் கழிவறைகள் கட்டுவது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இ-ஷ்ரம் போர்ட்டலில் இணைத்து அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்குவது உள்ளிட்ட 14 அறிவிப்புகள் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியாகி உள்ளன.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழு பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றி உள்ளனர்.

பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மேலும், மோடியின் உத்தரவாதம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை 24 கேரட் தங்கம் போன்றது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : இஸ்ரேல் - ஈரான் போர்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்? இந்தியா யார் பக்கம்? - Iran Israel War

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.