ETV Bharat / bharat

“தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” - வி.கே.பாண்டியன் அறிவிப்பு! - VK Pandian left from Politics

VK Pandian announced his retirement: ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில், வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

VK Pandian Photo
VK Pandian Photo (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 5:13 PM IST

Updated : Jun 9, 2024, 7:12 PM IST

புவனேஸ்வர்: ஒடிசாவில் தொடர்ந்து 24 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் நடந்து முடிந்த சட்டபேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இந்த தேர்தல் தோல்விக்கு கட்சிக்குள் இருந்தும், வெளியே இருந்தும் வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனி உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். என்னுடைய கனவு ஐஏஎஸ் ஆக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எனது குடும்பம் கேந்திரபராவில் இருந்ததால் ஒடிசாவிற்கு வந்தேன். இங்கு வந்த பின் இங்கு உள்ள மக்கள் என் மீது அளவு கடந்த பாசம் மற்றும் அன்பு தந்து வந்தனர். 12 வருடம் முன்பு முதலமைச்சர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்தேன்.

முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் வேலை பார்ப்பது மிக பெருமையாக இருந்தது. ஒடிசா மக்களுக்கு கல்வி, சுகாதாரம், வறுமை, ஒழிப்பு, விளையாட்டு, உள்கட்டமைப்பு, பெண்கள் மேம்பாடு மற்றும் கோயில் எனப் பல்வேறு துறையகளில் சிறப்பாக திட்டங்கள் செயல்படுத்தினோம்.

இதனையடுத்து, என்னுடைய ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்தேன். நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தேன். பதவி அல்லது அதிகாரத்தை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. இதனால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை, கட்சியிலும் பொறுப்பு வாங்கவில்லை.

24 ஆண்டுகளாக இருந்த எனது சொத்து மதிப்பு தற்போது வரை மாறவில்லை. நவீன் பட்நாயக்கிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தில் அரசியலுக்கு வந்தேன். தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன். என்னுடைய அரசியல் பயணத்தில் யாரும் காயப்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பிஜு ஜனதா தளம் கட்சியில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நவீன் பட்நாயக் அரசியல் வாரிசு நான் இல்லை. என்னுடைய மூச்சுக் காற்றாக நவீன் பட்நாயக் இருப்பார்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வயநாடு? ரேபரேலி? இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டம் கூறுவது என்ன? - RAHUL GANDHI

Last Updated : Jun 9, 2024, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.