ETV Bharat / bharat

அக்பரையும், சீதாவையும் ஒன்றாக அடைப்பதா..! சிங்கங்களின் பெயரால் வந்த சர்ச்சை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 5:35 PM IST

Siliguri Bengal Safari: மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி பெங்கால் சஃபாரி பூங்காவில் அக்பர், சீதா எனப் பெயரிடப்பட்ட சிங்கங்களை ஒன்றாக அடைத்து வைத்திருப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

VHP moved to calcutta high court for lioness sita housed with lion akbar
சிங்கங்களின் பெயரால் வந்த சர்ச்சை

ஜல்பைகுரி (மேற்கு வங்கம்): மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவில் அக்பர், சீதா எனப் பெயரிடப்பட்ட இரண்டு சிங்கங்களை ஒன்றாக அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷித் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்சில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா அமர்வு இந்த மனுவைப் பிப்ரவரி 20ஆம் தேதி விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து பிப்ரவரி 12ஆம் தேதி விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் சில விலங்குகள் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டது. அதில் 7 வயதில் ஒரு ஆண் சிங்கம் மற்றும் 5 வயதில் ஒரு பெண் சிங்கமும் இருந்துள்ளது.

இந்நிலையில், முகலாய பேரரசரான அக்பரின் பெயரைக் கொண்ட சிங்கத்தையும், புராணங்களில் ராமரின் மனைவியான சீதாவின் பெயரைக் கொண்ட சிங்கத்தையும் ஒன்றாக அடைக்கக்கூடாது என விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், சிங்கத்திற்கு தாங்கள் புதிதாகப் பெயரிடவில்லை எனவும், சிங்கங்களுக்கு ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்தது எனவும், வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மாநில வன அதிகாரிகள் மற்றும் பெங்கால் சஃபாரி பூங்காவின் இயக்குநர் இந்த வழக்கில் எதிர் தரப்பினராக்கப்பட்டுள்ளனர்.

அக்பர், சீதா எனச் சிங்கங்களுக்குப் பெயரிட்டு அவற்றை ஒன்றாக அடைப்பது இந்து மதத்தின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் எனவும், சிங்கத்தின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும், விஷ்வ ஹிந்து பரிஷித் அதன் மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.