ETV Bharat / bharat

டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கிய பெண்.. 30 மணி நேரம் திகில்.. நடந்தது என்ன? - cyber arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 7:05 PM IST

woman lost money under cyber arrest: உத்தராகண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு போலி அதிகாரிகளிடம் 10.50 லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் மோசடி (கோப்புப்படம்)
டிஜிட்டல் மோசடி (கோப்புப்படம்) (credit - ETV Bharat)

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தாலன்வாலா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நீங்கள் தாய்லாந்துக்கு அனுப்பிய கொரியர் பார்சலில் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் மும்பை குற்றப்பிரிவில் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண் செய்வதறியாமல் இருந்துள்ளார். பின்னர் சில நேரம் கழித்து ஸ்கைப் வீடியோ கால் மூலமாக அந்த பெண்ணுடன் காவல் உடையில் சிலர் தொடர்புகொண்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் பார்சல் தொடர்பாக விவரங்களை கேட்பதுபோல சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த பெண்ணும் அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதன் பிறகு, சில ஆவணங்களை மும்பை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதாக கூறிய அவர்கள் அந்த பெண் மீது வழக்கு பாயாமல் இருக்க 10.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் மீண்டும் பீதியான அந்த பெண் ஒரு வழியாக பணத்தை ஏற்பாடு செய்து வங்கிக்கு சென்று மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு பணத்தை டெப்பாசிட் செய்துள்ளார். அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் குழப்பத்தில் இருந்த அந்த பெண் கடைசியாக தாலன்வாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களின் வங்கி விவரம் மற்றும் மொபைல் எண்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த பெண் சில தினங்களுக்கு முன்பு ஒரு கொரியர் அனுப்பியுள்ளார். அவரது தரவுகளை மர்ம நபர்கள் திரட்டி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தில் 16 பேர் பலி.. சேதமடைந்த வீடுகளில் பணம், நகை கொள்ளை.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.